தமது சம்பள பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு வலியுறுத்தி நாடுபூராகவுமுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை நாளைய தினம் கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் இவர்கள் போராட்டம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளவும் தீர்மானித்துள்ளனர்.
மாத சம்பளத்தை அதிகரிக்கும் சுற்றறிக்கையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
0 Comments