கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது இன்று மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு பேரணியானது மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியூடாக மட்டக்களப்பு நகரினை அடைந்து, கோவிந்தன் வீதியூடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை அடைந்து வாவிக்கரையூடாக பீடத்தினை வந்தடைந்தது.
இதன்போது மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடக்கோரியும் இலவச கல்வியை பாதுகாக்க கோரியும் காந்திபூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாணவர்களினால் நடாத்தப்பட்டது.
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் தமது எதிர்ப்பினை காட்டும் வகையில் மாறுவேடங்களையும் அணிந்திருந்ததுடன், எதிர்ப்பு சுலோகங்கள் கொண்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் 500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments