Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகளில் சரீரத் தண்டனை வழங்குதல் தொடர்பான சுற்றுநிருபம் !

பாடசாலைகளில் சரீரத் தண்டனை வழங்குதல் தொடர்பான சுற்றுநிருபம்
*****************
[ இவ் விடயம் தொடர்பாக இலங்கை கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்டு தற்போதும் நடைமுறையிலுள்ள 1961 ம் ஆண்டின் 26 ம் இலக்க நிருபம் இது ] ================================================
இல : NSAA 158 .
வித்தியா பகுதி
மலாய் வீதி , கொழும்பு .
1961 ம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் திகதி
சகல அரசினர் பாடசாலைகளினதும் வித்தியாபதியின் முகாமையிலுள்ள பாடசாலைகளினதும் அதிபர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும்
பாடசாலைகளில் சரீரத் தண்டனை
—————————————————–
சரீர தண்டனை சம்பந்தமான 21.12. 1927 ந் திகதிய E 36 ம் இலக்க சுற்றுநிருபத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி கீழே கொடுக்கப்படுகிறது. உங்கள் பாடசாலை ஆசிரியர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டுவரவும்.
டீ .ஜீ. குலதுங்க
வித்தியாபதிக்காக
சரீர தண்டனை சம்பந்தமான 21.12. 1927 ந் திகதிய E 36 ம் இலக்க சுற்றுநிருபத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி .
ஒரு ஆசிரியரின் தகுதியின்மையை நிரூபித்தற்கு , சரீர தண்டனை விதிக்காது மாணாக்கரிடையே ஒழுங்கை நிலைநாட்டவும் படிப்பில் அவர்களின் கவனத்தைப் பெறவும் முடியாமையைப்பார்க்கிலும் நிச்சயமான சான்று வேறு எதுவும் இல்லையென ஆசிரியர்கள் நினைவூட்டப்படுகின்றனர். கல்வி இன்னும் நவீனமாகத் தோன்றும் நாட்டின் பிற்போக்கான பகுதிகளில் சரீர தண்டனை முற்றும் ஏற்றதொன்றல்ல . சரீர தண்டனை விதிப்பதால் பாடசாலைகளுக்குச் செல்வதிலிருந்து பிள்ளைகளை நிறுத்தக்கூடிய அல்லது பெற்றோரின் மனதில் பாடசாலைமீது வெறுப்பை உண்டாக்கக்கூடிய நிலைமையிலுள்ள பாடசாலைகளில் சரீர தண்டனை ஒருபோதும் பிரயோகிக்கப்படலாகாது.
சரீர தண்டனை சம்பந்தமான பின்வரும் விதிகள் கவனமாக அனுஷ்டிக்கப்படல் வேண்டும்.
அ ) பின்வரும் சந்தர்ப்பங்களில் அன்றி சரீர தண்டனை விதிக்கப்படலாகாது.
1. பாரதூரமான துர்நடத்தை
2. வழக்கமான சோம்பேறித்தனம் , வேறு வகைத் தண்டனை விதிக்கப்பட்டு பயனளிக்காதவிடத்து .
படிப்பில் சாதாரணமாக அலட்சியம் காட்டும் சந்தர்ப்பங்களில் சரீர தண்டனை விதிக்கப்படலாகாது.
ஆ ) கலவன் பாடசாலைகள் புறநீங்கலாக சரீர தண்டனை தலைமை ஆசிரியர்களால் மாத்திரமே விதிக்கப்படவேண்டும். கலவன் பாடசாலைகளில் பெண்பிள்ளைகளுக்கு உதவி ஆசிரியையை சரீர தண்டனை விதிக்கலாம் . ஆசிரியர்கள் பெண்பிள்ளைகளுக்கு சரீர தண்டனை விதிக்கக்கூடாது.
இ ) சரீர தண்டனை விதிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கென வைத்திருக்கும் புத்தகத்தில் குற்றத்தின் தன்மையும் கொடுக்கப்பட்ட அடிகளின் எண்ணிக்கையும் பதியப்படல் வேண்டும்.
ஈ ) உள்ளங்கையில் ஒரு பிரம்பினாலேயே சரீர தண்டனை விதிக்கப்பட வேண்டும் . அடிகளின் எண்ணிக்கை ஒருபோதும் நாலுக்கு மேற்படலாகாது. மிகச் சிறு பருவப் பிள்ளைகளும் பலங்குறைந்த பிள்ளைகளும் ஒருபோதும் தண்டிக்கப்படலாகாது . பிள்ளைகள் ஒருபோதும் கையால் அடிக்கப்படவேனும் கட்டிவைக்கப்படவேனும் ஆகாது.
உ ) பாடசாலை மேசைமீது பிரம்பை வைத்திருக்கக் கூடாது. அது ஆசிரியரின் அறையில் வைக்கப்பட்டு தேவையான சந்தர்ப்பங்களில் மட்டுமே வெளியில் எடுக்கப்பட வேண்டும்.
****************************** **********************************
இச்சுற்றுநிருபத்தின் பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பாக வேறு சுற்று நிருபங்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் இவற்றால் மேலேயுள்ள சுற்றுநிருபம் மாற்றம் செய்யப்படவோ செல்லுபடியற்றதாக ஆக்கப்படவோ இல்லை

Post a Comment

0 Comments