Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வாழைச்சேனை மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வு

உடல் உள மேம்பாட்டு வாரத்தினை முன்னிட்டு வாழைச்சேனை பிரதேசசெயலகம் மற்றும் வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு இணைந்து விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தன.
குறித்த நிகழ்வு இன்று வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு தலைவர் சி.பரமானந்தம் தலைமையில், வாழைச்சேனை இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக வாழைச்சேனை இந்துக்கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவன், பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் சி.சிவநேசராஜா, சமூக சேவை உத்தியோகத்தர்களான அ.நஜீம், க.ஜெகதீஸ்வரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாற்றுத் திறனாளிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கிடுகு பின்னுதல், தேங்காய் திருவுதல், குண்டு, பரிதி எறிதல், அப்பிள் சாப்பிடுதல், வொலிபோல் உட்பட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினருக்கும் வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்களுக்கும் இடையே நடைபெற்ற வொலிபோல் போட்டியில் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் வெற்றி பெற்றனர்.
இதன்போது வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.




Post a Comment

0 Comments