பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இன்று சரணடையப்போகும் சசிகலா, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். அப்போது மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா, ஜெயலலிதா சமாதி மேல் கையை மூன்று முறை அடித்து சபதம் செய்தார். ’சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன்’, என சசிகலா சபதம் ஏற்றுக் கொண்டதாக அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய சின்னம்மா சபதம் ஏற்றார்.
0 Comments