பாக்கிஸ்தானில் சூபி வழிபாட்டுத்தலம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 72 பேர் கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்து பயங்கரவாதிகளிற்கு எதிராக அந்த நாட்டு இராணுவம் பாரிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
வியாழக்கிழமை சூபி வழிபாட்டுத்தலமொன்றின் மீது சவான் என்ற நகரில் தற்கொலை குண்டுதாரியொருவர் மேற்கொண்ட தாக்குதலில் 70 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது.குறிப்பிட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ள அதேவேளை சிந்துமாகாணத்தில் மூன்று நாள் துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நவாஸ்செரீவ் இந்த தாக்குதலிற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் பயங்கரவாதிகளிற்கு எதிராக உடனடிநடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.இதேவேளை இந்த தாக்குதலிற்கு பழிவாங்கப்படும் என பாக்கிஸ்தான் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
0 Comments