Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஸ்டார்க்கின் அதிரடியால் 250 ஓட்டங்களை கடந்தது ஆஸி

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல்நாள் ஆட்டமுடிவில் ஆஸ்திரேலிய அணி ஓன்பது விக்கெட்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றுள்ளது.
புனேயில் இன்று ஆரம்பமாகிய முதலாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆரம்பத்தை வழங்கினர்( 82) எனினும் தொடர்ந்து விக்கெட்களை இழந்த நிலையில் 205 ஓட்டங்களிற்கு ஓன்பதாவது விக்கெட்டை இழந்து இன்றைய நாளிலேயே முழுவிக்கெட்களையும் இழந்து விடும் என்ற நிலை காணப்பட்டது.
எனினும் மிச்செல் ஸ்டார்க்கின் அற்புதமான 57 ஓட்டங்கள் காரணமாக ஆஸ்திரேலிய அணி 250 ஓட்டங்களை கடந்தது.
இந்தியப்பந்து வீச்சாளர்கள் சார்பில் உமேஸ் யாதவ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

Post a Comment

0 Comments