
ஆசிரிய சேவையில் 32 வருடகால சேவையினையும் மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 25 வருடமும் சேவையாற்றி (22.02.2017) இன்று 58 வது பிறந்த நாளைக் கொண்டாடி இராசதுரை ரெட்னம்மா அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்கின்றார். இதனை முன்னிட்டு பட்டிருப்பு தேசிய பாடசாலை கல்விச் சமுகத்தினரால் சேவை நலன் பாராட்டு விழா இடம்பெற்றது. இதன் போது அன்னாரது மகத்தான சேவை நினைவுகூரப்பட்டது. அத்துடன் மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்க்கப்பட்டு, நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது. இதன் பின்னர் ஆசிரியரால் பாடசாலை கல்விச் சமுகத்தினருக்கு மதியபோசனமும் வழங்கப்பட்டது.
0 Comments