செப்டம்பர் 22, காலை உணவை முடித்த ஜெ., மிகவும் தளர்ந்து காணப்பட்டுள்ளார். அவர் கூடவே இருந்து பணிவிடை செய்யும் ‘அந்த’ பணிப் பெண் மட்டுமே கூட இருந்துள்ளார்.
வழக்கமான மருந்துகள் மாத்திரைகள் சில சாப்பிட்ட ஜெ., எதோ ஒரு பதட்டத்தில் இருந்துள்ளார். யாரிடமும் எதுவும் பேசவில்லை.
தனது பிரத்யேக செல்போனைத் தேடியுள்ளார். ஆனால், வழக்கமாக வைக்கும் இடத்தில் போன் இல்லை. டென்ஷன் ஆனார் ஜெ.,
சசியை அழைத்துவரச் சொல்ல, மதியம் இரண்டுமணிக்கு மேலே வந்தாராம் சசிகலா. பர்சனல் போன் பற்றி கேட்டிருக்கிறார் ஜெ., பேச முடியாத உடல்நிலை. மிகவும் பலகீனமாகவே இருந்துள்ளார் ஜெ.,
ஆனால், போன் விஷயமாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பணிப் பெண் அருகே உள்ள தனது அறைக்குப் போய் பயந்தபடி நின்றுள்ளார். வாக்குவாதம் முற்ற படார் என்று அடிக்கும் சத்தமும், அம்மா என்று அலறும் சத்தமும் கேட்டுள்ளது.
பணிப்பெண் வெளியே ஓடிவர, ஜெ., அலங்கோலமாக கீழே விழுந்து கிடந்துள்ளார். பணிப்பெண் பதறியபடி அம்மாவை தூக்க முயற்சிக்க, அவரையும் பிடித்து தள்ளியுள்ளார்கள்.
சசி மட்டுமல்ல கூடவே சிலரும் இருந்தார்கள் என்கிற தகவலும் கசிகிறது. அதன் பின் நடந்த அனைத்தும் பயங்கரம்.
பற்கள் கொட்ட வாயில் இருந்து ரத்தம் கசிய முணகியபடி படிக்கெட்டு அருகே கிடந்துள்ளார் ஜெ.,வை காப்பாற்ற வழியே இல்லாத சூழல். நடுநடுங்கி நின்றுள்ளார் பணிப்பெண். ஜெ., அதன் பின் அசைவற்றுக் கிடந்துள்ளார்.
பணிப்பெண் என்ன செய்வது என்றே தெரியாமல் அழுதபடி நிற்க உன் அப்பா அம்மாவை வரச்சொல் என்று சசி கூற, அதற்குள் அன்று மாலை, காதும்காதும் வைத்தது போல ஜெ.,வை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார்கள்.
அடுத்த நாள் பணிப் பெண்ணின் அப்பா, அம்மா என் பொண்ணை விட்ருங்க எங்கேயாவது போய் பிழைத்துக் கொள்கிறோம். வாயைத் திறக்க மாட்டாள் என்று கதறியபடி பெண்ணைக் கூட்டிக் கொண்டு தலைமறைவு ஆகிவிட்டார்கள்.
அப்போலோ பெண் டாக்டர் ஜெ., வரும்போதே அசைவற்றுத் தான் கிடந்தார் அடுத்த இரண்டு நாட்கள் எந்த அசைவும் இல்லை என்கிற செய்திகளும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
அப்போலோ பெண் டாக்டர் இப்போது தலைமறைவாகி விட்டார். அவரும் சமூகவலைத் தளங்களில் சில உண்மைகளைச் சொல்லி வருகிறார்.
எதுவாக இருந்தாலும் முறையான விசாரணை நடத்தினால் தான் என்ன நடந்தது என் கிற முழு உண்மைகளும் மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் தெரிய வரும்.
முதல்வர் பன்னீர் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
இந்த தகவலை உங்கள் லைவ் டே டிசம்பர் ஆறாம் தேதியே சில உண்மைகளை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளது. என்பதை நினைவு படுத்துகிறோம்.
டெய்ல் பீஸ்: நடிகை கவுதமியும் ஆரம்பம் தொட்டே ஜெ., செப்டம்பர் 22 ல் என்னவோ விபரீதம் நடந்துள்ளது.
கூடவே இருந்த பணிப் பெண்ணை அழைத்து வந்து விசாரிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்.
சசிகலாவும்,அப்போலோவும் உண்மை நிலையை வெளியிடாத வரை இதைப்போன்ற யூக அடிப்படையிலான செய்திகளும் வரத்தான் செய்யும்.
(படம்: கோப்பு)
0 Comments