Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சிரியா அரசாங்கம் 13000 பேரை சிறையில் தூக்கிலிட்டுள்ளது- மன்னிப்புச்சபை அதிர்ச்சி தகவல்

சிரியா அரசாங்கத்தினால் அரச எதிர்ப்பாளர்கள் 13000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.இரகசிய சிறைச்சாலையொன்றிலேயே இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் இவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும் மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.
சிரியாவின் மிகப்பயங்கரமான சைட்னயா சிறையில் 2011 முதல் 2015 வரை ஓவ்வொரு வாரமும் 50 பேர் வரையில் தூக்கிலிடப்பட்டனர் எனவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.சிரிய அரசாங்கத்தின் உயர்மட்ட உத்தரவுடனனேயே இந்த படுகொலைகளை இடம்பெற்றனஎனவும் மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.
சர்வதேசமன்னிப்புச்சபை குறிப்பிட்ட கொலைகள் தொடர்பில் சிறைக்காவலர்கள் உட்பட 85 பேரை பேட்டிகண்டுள்ளது.இவர்கள் மூலம் ஓவ்வொருவாரமும் இரு குழுக்களாக சுமார் 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.இவ்வாறு எதிர்தரப்பு ஆதரவாளர்களை கொலை செய்வதற்கு முன்னர் அதிகாரிகள் அவர்களை இராணுவநீதிமன்றமொன்றிற்கு அழைத்துசென்றுள்ளனர் அங்கு இரண்டு நிமிட விசாரணை இடம்பெற்றுள்ளது,அங்கு அவர்கள் குறிப்பிட்ட குற்றங்களை செய்தார்களா என கேட்கப்படுவார்கள் , அவர்கள் பதில் எவ்வாறானதாக காணப்பட்டாலும் பின்னர் அவர் தூக்கிலிடப்பட்டார்கள் எனவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை சாதாரண சிறைக்கு மாற்றப்போவதாக தெரிவித்து வேறொரு பகுதிக்கு அழைத்து சென்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாக்குவார்கள்,அதன் பின்னர் நள்ளிரவில் அவர்களது கண்கணை கட்டி வேறு ஓரு இடத்திற்கு கொண்டுசெல்வார்கள் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு சில நிமிடங்களிற்கு முன்னரே அது குறித்து அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ள மன்னிப்புச்சபை இது யுத்தகுற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்றும் சாடியுள்ளது.

Post a Comment

0 Comments