வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வானிலை அவதான நிலையம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த தினங்களில் ஏழு மாவட்டங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, 4065 குடும்பங்களைச் சேர்ந்த 12,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக வௌ்ள நிலைமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments