எப்போதும் சொத்துள்ள உயர் வர்க்கத்தினரிடம் இருக்கும் நாட்டின் ஆட்சி நிர்வாகம் சாதாரண மக்களின் கைகளுக்கு கிட்டும்வரை நாட்டில் நல்லதொரு மாற்றத்தை எதிர்ப்பார்க்க முடியாது என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் அத்தியாவசிய சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை. மாணவர்களின் கல்வியில் அநீதி இழைக்கப்படுகின்றது. பிள்ளைகள் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லாது போயுள்ளது. ரோபோக்களை போன்ற ஒரு எதிர்கால சமுதாயம் உருவாக்கப்படுகின்றது. இவர்கள் ஆரோக்கியமான சமூகமாக உருவாகுவது சாத்தியமற்றது. சிறந்த ஒரு சமூக சூழ்நிலையை உருவாக்க முடியாக அரசாங்கம் பயனற்றதாகும். எனவே கடந்த 69 வருடங்களாக தொடர்கின்ற சொத்துள்ள வர்க்கத்தினரின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து சாதாரண பொதுமக்களின் கைகளுக்கு ஆட்சி கைமாற்றப்பட வேண்டும் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
0 Comments