Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை - நற்பிட்டிமுனைக் கிராமத்தில் பிறந்தநாளை கொண்டாட்டிய இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

கல்முனை - நற்பிட்டிமுனைக் கிராமத்தில் பிறந்தநாளை கொண்டாட்டிய இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியைச் சேர்ந்த பொன்னுத்துரை தர்மேந்திரா (வயது 30) என்பவரே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞரின் சடலம் அவர் வசித்த வீட்டிற்கு அருகிலிருந்த உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் நேற்று பகல் தனது 30ஆவது பிறந்த நாளை கொண்டாடியதுடன், இன்று அவரது உறவினர் முறையான நபர் இறந்து ஒரு வருட திவசத்திற்கான பொருட்கள் வாங்குவதிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையின் குறித்த இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது பற்றிய மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

0 Comments