Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயமும், பட்டிருப்பு வலய விஞ்ஞான பாட ஆசிரியர்களும் இணைந்து ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாவட்ட வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட  கட்டடத் தொகுதியைத் திறப்பதற்காக எதிர்வரும் 01.02.2017 புதன்கிழமை  அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்கள் வருகை தரவுள்ளார்.   இதனை முன்னிட்டு சிரமதானங்கள், விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடாத்தப்படுகின்றன. அந்த வகையில் 28.01.2017 அன்று  மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலய ஊழியர்களும், பட்டிருப்பு வலய விஞ்ஞான பாட ஆசிரியர்களும் இணைந்து டெங்கு தொடர்பான விழிப்பு, போதைப்பொருள் தொடர்பான, புகைத் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் அம்மணி, பட்டிருப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.மா.உலககேஸ்பரம் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள்,  முகாமைத்துவ ஊழியர்கள், பட்டிருப்பு வலய விஞ்ஞான பாட ஆசிரியர்கள் என்போர் கலந்து சிறப்பித்தனர். இவற்றைப் படங்களில் காணலாம்.











Post a Comment

0 Comments