ரயிலில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்று இருப்பதாக கடந்த 26ம் திகதியன்று பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26ம் திகதி இரவு கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் செல்லவிருந்த ரயிலில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்று இருப்பதாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதற்கமைய அந்த ரயிலில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்ட பின்னர், அதில் அவ்வாறு எதுவுமில்லை எனத் தெரியவந்ததாக செய்திகள் வௌியாகின.
இந்தநிலையில் குறித்த தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட நபர் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், இன்று காலை 10.30 அளவில் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.
இவரை இன்று கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments