Advertisement

Responsive Advertisement

பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

இலங்கையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள் நீண்ட காலமாக வெளியிடப்படாத நிலையில் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளன.
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பெறுபேறுகள் வெளியிடப்படாதமையால் அவர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படாமலும்சம்பளம் அதிகரிக்கப்படாத நிலையும் காணப்பட்டது.
இதனால் தாம் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சுட்டிக் காட்டி தமது பெறுபேறுகளை விரைவாக வெளியிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பெறுபேறுகள் நீண்ட காலமாகியும் வெளியிடப்படாதமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கடந்த வாரம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு, பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பெறுபேறுகள் தாமதிக்கப்படுவதற்கான காரணத்தைக் கேட்டறிந்துள்ளார்.
மேலும், இனியும் தாமதிக்காது, விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார் என்பதும், இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சிடமும் தெரியப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments