![]() |
Add caption |
எதிர் வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி பூமியை மர்ம பொருள் ஒன்று தாக்கவுள்ளதாக ரஷ்யாவைச் சேர்ந்த வானியலாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, சுனாமி பேரழிவை ஏற்படுத்த கூடும் என குறிப்பிட்டுள்ளதுடன், கடந்த ஆண்டு நாசா விசித்திரமான பொருளை பூமியில் சுற்று வட்டப்பாதையில் கண்டுள்ளது.
குறித்த பொருளின் பெயர் டபிள்யூ எப் 9 என கூறப்பட்டுள்ளது.அத்துடன், அப்பொருள் விண்கல் அல்லது சிறுகோளாக இருக்கலாம் என்று நாசா கணித்துள்ளது.
இதனை தொடர்ந்து, அண்மையில் பூமியை நோக்கி மர்ம பொருள் வருவதாகவும் அதனால் பூமிக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என நாசா குறிப்பிட்டது.
அத்துடன், 51மில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் அது கடந்து சென்று விடும் எனவும் அறிவித்தது.
இந்த நிலையில் குறித்த டபிள்யூ எப் 9 மர்ம பொருள் பூமியை வந்து தாக்கும் எனவும் அதனால் பூமியின் பல பகுதிகளில் சுனாமி போன்று பேரழிவுகள் ஏற்படக்கூடும் எனவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments