Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் பொதுபலசேனா ஒன்றுகூடுவதற்கும் பொதுக்கூட்டம் நடாத்துவதற்கும் நீதிமன்றம் தடை.

மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை பொதுபலசேனாவை சேர்ந்தவர்கள் ஒன்றுகூடுவதற்கும் பொதுக்கூட்டம் நடாத்துவதற்கும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனா அமைப்பினால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு அதனால் சிரமங்கள் ஏற்படும் என்பதனால் தடைவிதிக்குமாறு மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை ஆராய்ந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே.பிரேம்நாத் இந்த தடையுத்தரவினை விடுத்தார்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளான சத்துருக்கொண்டான் தொடக்கம் காத்தான்குடி,வவுணதீவு,கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொதுபலசேனாவை சேர்ந்தவர்கள் ஒன்றுகூடவோ கூட்டங்களை நடாத்தவோ,ஆர்ப்பாட்டங்களை நடாத்தவோ தடைவிதிக்கப்படுவதாக ஆணையில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments