Advertisement

Responsive Advertisement

ஆவணக்காப்பகம் வவுனியாவில் திறந்து வைப்பு

வவுனியா மவட்டத்திற்கான ஆவணக்காப்பகம் வவுனியா மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
 
வவுனியா மாவட்டத்தில் காணப்படும் தொல் பொருட்கள் மற்றும் அதனுடைய புகைப்படங்களை தாங்கியதாக அமைக்கப்பட்டுள்ள ஆவணக்காப்பகம் மாவட்ட செலகத்தில் அனைவரும் பார்வையிடக்கூடிய வகையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
 
இவ் ஆவணக்காப்பகத்தில் தமிழர்கள் மற்றும் சிங்களமக்கள் பயன்படுத்திய பித்தளை பாத்திரங்கள், மட்பாண்டங்கள், உட்பட நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
 
வவுனியா அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் இ. ரவீந்திரன், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், உதவி மாவட்ட செயலாளர் என். கமலதாசன், வவுனியா பிரதேச செயலளார் கா. உதயராசா உட்பட பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
DSC06915DSC06938

Post a Comment

0 Comments