க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு தாமதமாகியுள்ளதால் அதனை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக பல்வேறு புலமை பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் பரீட்சை பெறுபேறு வெளியாமையினால் அவர்களுக்கு அதற்காக விண்ணப்பிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் கடந்த முறை பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் தாம் எதிர்ப்பார்த்த கற்கை நெறி கிடைக்காது இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றி பெறுபேற்றை எதிர்ப்பார்த்து இருப்பதாகவும் ஆனால் தற்போது பல்கலைக்கழகங்களில் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் தீர்மானமெடுக்க முடியாது குழப்பமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெறுபேற்றை தாமதப்படுத்தாது விரைவில் அதனை வெளியிட நடவடிக்கையெடுக்குமாறு ஆசிரியர் சங்கங்கள் பரீட்சைகள் திணைக்களத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
0 Comments