Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு பதில் முதலமைச்சராக அமைச்சர் தண்டாயுதபாணி

கிழக்கு மாகாண சபையின் பதில் முதலமைச்சராக கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று நண்பகல் 12.45 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பர்னாண்டோ முன்னிலையில் ஆளுனர் மாளிகையில் பதில் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் ஈரானுக்கு சென்றுள்ளோலேயே முதலமைச்சராக கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கிற்கான வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக நேற்றுமுன்தினம் 26ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், ஈரான்சென்றுள்ளார். பதில் முதலமைச்சராக தான் பொறுப்பேற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
கிழக்கு மாகாண சபையில் உள்ள ஏனைய அமைச்சர்களின் வேண்டு கோளுக்கு அமைய இப் பதவியை ஏற்றுள்ளேன்.எமது மாகாணத்தில் உள்ள அமைச்சர்கள் நாம் ஒரு புரிந்துணர்வுடனும் கூட்டப் பொறுப்புடனும் எமது கடமைகளை ஆற்றி வருகின்றோம்.
ஒவ்வொறு அமைச்சர்களும் தங்களுடைய அமைச்சர்களின் கடமையை ஆற்றுக்கின்ற அதே வேளை ஏனைய அமைச்சர்களின் கடமைகளுக்கு ஒத்தாசை வழங்கும் கலாச்சாரத்தையும் பின் பற்றி வருகின்றோம் அதற்கமைய இந்த தற்காலிக பதில் முதலமைச்சர் பதவியை நான் ஏற்றுள்ளென். எமது மாகாணத்தில் உள்ள மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் சிறப்பாக செய்வதற்கும் நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற் கொள்வோம் என அவர் தெரிவித்தார்

Post a Comment

0 Comments