புசல்லாவை தொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
தொத்சைல்ட் தோட்டம் வை.ஆர்.சி.பிரிவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில் தனியார் தோட்டத்திற்கு தொழிலுக்காக சென்று வீடு திரும்பும் வேளை குளவி தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விசாரணைகளை புசல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments