Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சுமனரத்ன தேரரை கைது செய்திருந்தால் நேற்று பிரச்சனை ஏற்பட்டிருக்காது

மட்டக்களப்பு – பங்குடாவெளியில் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள தனியார் காணிக்குள்ள   கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அத்துமீறி நுழைந்த போது  மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரைகைதுசெய்திருந்தால் நேற்றைய தினம் மட்டக்களப்பில் இவ்வாறான  பிரச்சனை ஏற்பட்டிருக்காது  என  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு   மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கைதுசெய்யுமாறு   நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் இவரை கைதுசெய்யாதது ஏன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்  கேள்வி எழுப்பியுள்ளார்.
பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசாரதேரர் உள்ளிட்ட குழுவினர் மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை  சந்திப்பதற்காக மட்டக்களப்பிற்கு நேற்றைய தினம் ஐந்து பேரூந்துகளில்   சென்றனர்.
இந்த நிலையில், குறித்த குழுவினரை   மட்டக்களப்பிற்கு செல்லவிடாது பொலநறுவை –வெலிக்கந்தைபகுதியில்  பொலிஸார் அவர்களை வழிமறித்து  செல்லவிடாது தடுத்தனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அந்த பிரதேசத்தில்  உள்ள சிங்கள இளைஞர்களை இணைந்து கொண்டு   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மட்டக்களப்பில் பதற்றமான சூழ்நிலை உருவானதுடன், அதிகளவு பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
எனினும் அங்குள்ள சிங்கள இளைஞர்களை இணைந்து கொண்ட சுமனரத்ன தேரர் பொலிஸாரினால் போடப்பட்ட  பாதுகாப்பு  அரண்கள் மீது ஏறி நின்று கூச்சலிட்டவாறு  இனவாத  கருத்துக்களையும் கூறினார்.
இந்த நிலையிலே அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கைதுசெய்திருந்தால் நேற்றைய தினம் மட்டக்களப்பில் இவ்வாறான  பிரச்சினை ஏற்பட்டிருக்காது  என  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு   மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments