கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளவில் செயற்பட்டுவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பணியாளர் பதிவு கரும பீடத்தின் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதியிலிருந்து மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படவுள்ளது.
விமான நிலையத்தில் நவீனமய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை கருத்திற்கொண்டு பதிவு கரும பீடத்தின் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதனால் வெளிநாhட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு மற்றும் பதிவுகளை புதுப்பித்தல் முதலான பணிகளை தலைமை அலவலகத்தில் அல்லது தமது பிரதேச அலுவலகத்தில் மேற்கொள்ள முடியுமென்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
0 Comments