Advertisement

Responsive Advertisement

சிவனொளிபாத மலை பகுதியில் ஆங்காங்கே குப்பைகளை வீசுவதை தவிர்க்கவும்

சிவனொளிபாத மலைக்கு பல பாகங்களிலிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு யாத்திரிகள் வருகை தருகின்றனர்.
இதேவேளை இப்பகுதியில் உள்ள சுற்றாடலை பாதுகாக்க வேண்டிய தேவைகளும் உள்ளது. சிவனொளிபாதமலைக்கு வரும் யாத்திரிகள் பொலித்தின், வெற்று பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் சுகாதாரத்திற்கு சீர்கேடான குப்பை கழிவுகளை சிவனொளிபாதலை வழியில் ஆங்காங்கே வீசப்படுவதால் சூழல் மாசடைவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், யாத்திரிகள் ஏனையவர்களின் நலன் கருதி குப்பைகளை இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் போடுமாறு சிவனொளிபாதமலையின் நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன மற்றும் அம்பகமுவ பிரதேச சபை அதிகாரிகள், நல்லதண்ணி பொலிஸார் ஆகியோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்போது யாத்திரிகளின் வருகை குறைவாக இருந்தாலும், இன்னும் சில நாட்களில் பெருந்தொகையான யாத்திரிகள் வரும் பொழுது சூழலை பாதுகாக்கும் வகையில் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments