இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனிக்கான விசேட இறக்குமதி வரி ரூபா 6 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் சீனியின் விலை குறைவடைந்துள்ளதால் குறித்த இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், 1 கிலோ கிராமிற்கு ரூபா 7 ஆக காணப்பட்ட விசேட இறக்குமதி வரி ரூபா 13 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் குறித்த வரி அதிகரிப்பு காரணமாக சீனியின் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படாது எனத் தெரிவித்துள்ள அமைச்சு, குறித்த வரி அதிகரிப்பை இறக்குமதியாளர்களால் தாராளமாக சமாளிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
0 Comments