Advertisement

Responsive Advertisement

68 பாடசாலைகள் 2ம் திகதி திறக்கப்படாது

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றில் முதற்கட்டப் பணிகளில் 2017.01.02 தொடக்கம் 2017.01.13ம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, 87 பாடசாலைகள் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளன.
குறிப்பாக இவற்றில் 68 பாடசாலைகள் முழுமையாக பயன்படுத்தப்படுவதால் இவை அடுத்த வருடம் முதலாம் தவணைக்காக ஜனவரி 16ம் திகதி திறக்கப்படவுள்ளன.
பகுதியளவில் பயன்படுத்தப்படும் 19 பாடசாலைகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 2ம் திகதி முதலாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 150 இலட்சம் வரையான விடைத்தாள்கள் இம்முறை கிடைக்கப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, விடைத்தாள் திருத்தப் பணிகளுக்காக, ஹட்டன் ஷாந்த ஜோன் பொஸ்கோ மகா வித்தியாலயம், ஹட்டன் ஹய்லண்ட் வித்தியாலயம், திருகோணமலை ஒரிசில் விவேகானந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு மைக்கல்ஸ் கல்லூரி, மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலை, வவுனியா தமிழ் மகா வித்தியாலயம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துப் பெண்கள் பாடசாலை மற்றும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் உள்ளிட்ட 68 பாடசாலைகளே முழுமையாக பயன்படுத்தப்படவுள்ளன.

Post a Comment

0 Comments