ஒலிம்பிக் வீரரான குறுந்தூர ஓட்டவீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தியதலாவை வைத்தியசாலையில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
சில தினங்களுக்கு முன்னர் தியத்தலாவில் பயிற்றுவிப்பு பணியில் ஈடபட்டிருந்த போது இவருக்கு திடீரென்று ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கபபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
41 வயதான இவர் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருப்பதாகவே வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments