தற்போது நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் ஜனவரியில் வெளிநாடுகளிலிருந்து ஒரு இலட்சம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செலவின்றி முற்றும் முழுதாக தனியாரின் செலவுடன் இந்த அரிசி இறக்குமதி முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 04 ஆம் திகதி அரிசி இறக்குமதிக்கான உத்தியோகபூர்வ பணிகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் ஜனவரி 17 ஆம் திகதியளவில் இறக்குமதி பூர்த்தியடைந்து அரிசிக்கான தட்டுப்பாடு நிறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments