91 பேருடன் சிரியாவிற்கு சென்றுகொண்டிருந்த ரஸ்யஇராணுவ விமானம் கருங்கடல் பகுதியில் விழுந்து நொருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேவேளை விமானத்தில் இருந்தவர்கள் எவரும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ராடர்திரையிலிருந்த காணமற்போன குறிப்பிட்ட விமானம் சொச்சி கடற்பகுதியில் விழுந்து நொருங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறிப்பிட்ட விமானத்தில் ரஸ்ய படையினரும் பான்ட் வாத்திய குழுவினரும் பயணித்துக்கொண்டிருந்ததாகவும்,சிரியாவில் உள்ள ரஸ்ய போர்வீரர்கள் முகாமில் உள்ள படையினரை மகிழ்விக்கும் நோக்கில் இந்த பான்ட் வாத்திய குழுவினர் சென்றுகொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட விமானத்தில் ஏழு செய்தியாளர்களும் காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானத்தின் சிதைவுகள் ரஸ்யகரையிலிருந்து 1.5கிலோமீற்றர் தொலைவில் 50 முதல் 70 மீற்றர் ஆழத்தில் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை குறிப்பிட்ட விமானம் சிரியாவிற்கு படையினருடன் சென்றுகொண்டிருந்ததன் காரணமாக இந்த விமானம் தாக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் தொழில்நுட்பகோளாறே விபத்திற்கு காரணம் என ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


0 Comments