கடந்த 24 மணித்தியாலயங்களில் 254 விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இணைப்பாளர் புஷ்பா ரம்யாணி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
குறித்த தொகையானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 13 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடத்தில் நத்தார் தினத்துக்கு முதற்தினத்தில் 219 விபத்துகள் பதிவாகியிருந்த நிலையில் இவ்வருடம் 254 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த விபத்துகளில் வீதி விபத்துகள் அதிகமாக பதிவாகியுள்ளன. கடந்த 24 மணித்தியாலயங்களில் வீதி விபத்துகளால் காயமடைந்து 95 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொத்தமாக 63 வீதி விபத்துகள் இவ்வருடம் பதிவாகியுள்ளதுடன், அது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இதேவேளை வீடுகளில் இடம்பெற்ற 39 விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், 14 வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட விபத்துகளும் பதிவாகியுள்ளது.


0 Comments