மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியிலுள்ள வீட்டு வளவு ஒன்றிலிருந்து இன்று (25) வெடிக்காத 2 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
களுவாஞ்சிகுடி பகுதியிலுள்ள தனது வீட்டு வளவை துப்பரவு செய்து கொண்டிருந்த போது ஏதோ மர்மப் பொருள் தென்படுவதை அவதானித்த வீட்டு உரிமையாளர், களுவாஞ்சிகுடி பொலிசாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார், குண்டுகள் இரண்டையும் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட குண்டுகள் இரண்டும் எச்.ஈ வகையைச் சேர்ந்தது எனவும், இவ்விடயம் தொடர்பில்குண்டு செயலிழக்கும் பிரிவுக்கு அறிவித்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


0 Comments