மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுமண்வெளியில் தோணி கவிழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் குறுமண்வெளி-மண்டூர் வாவியில் மீன்பிடிக்கச்சென்றவரின் தோணியின் தடுப்பு கம்பு உடைந்து தோணி கவிழ்ந்துள்ளது.
இதன்போது வாவியில் வீழ்ந்தவரை காணாத நிலையில் அவரை மீனவர்கள் வாவியில் தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு சடலம் வாவியில் இருந்து மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறுமண்வெளியை சேர்ந்த விரசிங்கம் சதீஸ்(24வயது)என்ற இளைஞனே இவ்வாறு மீன்பிடிக்க சென்று உயிரிழந்தாhகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் களுவாஞ்சிகுடி ஆதா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments