சிவனொளிபாத மலை வனத்திற்குள் சென்ற 5 பேர் காணமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
லக்ஷபான தோட்ட முகாமையாரின் மகனும் அவரின் நண்பர்களுமே இவ்வாறு காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களிடையே இரண்டு யுவதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் நல்லத்தண்ணி லக்ஷபான தேயிலை தோட்ட வழியாக சிவனொளிபாத மலை காட்டுப்பகுதிக்குள் நேற்று மாலை சென்றுள்ள நிலையில் மீண்டும் இவர்கள் வீடு திரும்பாத நிலையில் அது தொடர்பாக இன்று காலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து அந்த காட்டுக்குள் சென்று தற்போது தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments