கவனயீனமாக பஸ்களை செலுத்தும் தனியார் பஸ் சாரதிகளுக்கு 25000 ரூபா அபராதம் விதிக்கப்பட வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிகவும் கவனயீனமாக பஸ்களை செலுத்தும் சாரதிகளுக்கு அபராதம் விதிப்பது அவசியமானது என தெரிவித்துள்ளனர்.
அநேகமான தனியார் பஸ் சாரதிகள் பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளினதும், பாதசாரிகளினதும் உயிர்ப் பாதுகாப்பை உதாசீனம் செய்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் தனியார் பஸ் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர்.
தனியார் பஸ் சாரதிகளுக்கு இடையிலான போட்டி, செல்லிடப்பேசிகளில் உரையாற்றிக் கொண்டே வாகனம் செலுத்துவது போன்ற காரணிகளினால் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாகவும், இவ்வாறான சாரதிகளுக்கு 25000 ரூபா அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும் பயணிகள் கோரியுள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 Comments