2018 ஆம் ஆண்டில் இலங்கைக்கு மின்சார நெருக்கடி ஏற்படாதென மின்சக்தி அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ்.படகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கை ஊடகங்களில், 2018ஆம் ஆண்டில் நாட்டில் பாரிய மின்சார நெருக்கடி ஏற்படும் என்ற பிரச்சாரத்தை பொறுப்புடன் அகற்றிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
தற்போது வரையில் மின்சார நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் மற்றும் அமைச்சு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானித்துள்ளது.
விரைவில் அவற்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தற்போது நிறுவப்பட்டுள்ள மின் நிலையங்களுக்கு அவசியமான வகையில் மின் விநியோகம் அமுலாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை மின் விநியோகம் தடை, குப்பி விளக்குகள் ஆயத்தப்படுத்திக் கொள்ளுமாறு சிலர் வெளியிடும் கருத்தில் எவ்விதமான உண்மையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments