களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் நேற்று(17) மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தின் பிரச்சினை தொடர்பில் ஆராயும் கூட்டம் நடைபெற்ற போது குறித்த ஆலயத்திற்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னம் கூறுகையில், நீதிமன்ற கட்டளை மற்றும் அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த ஆலயத்திற்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. ஆலயத்தின் புதிய தலைவராக மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாரும் முன்னாள் ஆலயத்தின் தலைவருமான க.ஞானரெத்தினம் மீண்டும் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டது எனத் தெரிவித்தார்.
இதே வேளை ஆலயத்தின் முன்னாள் தலைவர் க.ஞானரெத்தினம் கூறுகையில், புதிய நிர்வாகம் ஆலயத்தின் யாப்பினை மீறி தன்னிச்சையாக செயற்படுவதன் காரணமாக மக்கள் அந்த நிர்வாகத்திற்கு எதிராக செயற்பட வேண்டிய நிலையேற்பட்டது.
கடந்த நிர்வாகத்தின் தலைவராக இருந்து பொதுக் கூட்டத்தின் இறுதியில் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையிலேயே புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. எமது நிர்வாகத்தில் எந்தவிதமான குறைபாடும் இருக்கவில்லை எனத் தெரிவித்தார்.
0 Comments