Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சட்ட விரோதமாக மின்சாரம்பெற்ற பெண் விரிவுரையாளர் உட்பட இருவர் கைது-

மட்டக்களப்பு பழைய கல்முனை வீதியில் கல்லடி , நாவற்குடா பகுதியில் புதன்கிழமை சட்ட விரோமாக மின்சாரம் பெற்ற பெண் விரிவுரையாளர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து வந்த இலங்கை மின்சாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட பெண் விரிவுரையாளர் உட்பட இருவரும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு இசை நடனக்கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவரது கணவர் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவின் இணைப்பாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments