வடகிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவான கணவரை இழந்தவர்கள் வாழ்வதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்ப ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து உதவிகளை வழங்கவேண்டும் எனவும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள காத்தான்குடி பிராந்திய சுகாதார அலுவலக திறப்பு விழாவும் கையளிப்பு நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காத்தான்குடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நசீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகர் துங்லாய் மார்கூ,மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக யுனிசேப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதி போலா புலன்சியா,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் திருமதி கிறேசி நவரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
யுனிசேப்பின் அனுசரணையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் 10மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் இந்த சுகாதார பணிப்பாளர் அலுவலகம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
53ஆயிரம் குடும்பங்களைக்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தினை மையப்படுத்தியதாக இந்த காத்தான்குடி பிராந்திய சுகாதார அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,
வடகிழக்கு மாகாணம் யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்களின்போது யுனிசேப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகள் என்றும் மறக்கமுடியாதவை அதற்காக இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வடகிழக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 89ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 29ஆயிரம் விதவைகள் உள்ளனர்.அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் தொடர்ந்து உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியமும் யுனிசேப்பும் நடவடிக்கையும் நடவடிக்கையெடுக்கவேண்டும்.கடந்த காலத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களின்போது வழங்கிய உதவிகளைப்போன்ற உதவிகளை வழங்கமுன்வரவேண்டும்.
0 Comments