Advertisement

Responsive Advertisement

இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும் : வடக்கு ஆளுனர்

வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிதில்லையென வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள இடங்களை பொதுமக்களிடம் வழங்குவதை அங்கிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றது என அர்த்தப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள வீடுகள் பொதுமக்களிடம் கையளிக்கப்படுகின்றன. இதனை வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றதென அர்த்தப்படாது. வடக்கிலும் , தெற்கிலும் இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும். வடக்கில் கேரள கஞ்சா உள்ளிட்ட சட்ட விரோத போதைப் பொருட்கள் கடத்தப்படுவதனை நிறுத்த கடற்படை இருக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments