இறக்குமதி செய்யப்படுகின்ற பால் மாவிற்கு வற் அறவிடப்பட்டாலும் அதன் விலைகள் அதிகரிக்கப்படாதுத என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய வரி திருத்த சட்டத்தின் ஊடாக நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவிற்கு வற் வரி சேர்க்கப்பட்டது. இதனால் பால் மாவின் விலைகளை அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் முயற்சித்து வரும் நிலையில் இது தொடர்பாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால்மா நிறுவனங்களினால் முன்வைக்கப்படுகின்ற விடயங்களில் ஏதேனும் நியாயம் காணப்படும் பட்சத்தில், அது குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு மாற்று வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுக்க தயார் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும், 400 கிராம் பால்மாவின் விலை 325 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 810 ரூபாவாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது
Home »
எமது பகுதிச் செய்திகள்
» பால் மா விலை அதிகரிக்காது : நிதி அமைச்சர்
பால் மா விலை அதிகரிக்காது : நிதி அமைச்சர்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: