வங்காள விரிகுடா நிலை கொண்டிருக்கும் தாழமுக்கம் காரணமாக நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களுக்கு அடை மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கைக்கு நேரடியான பாதுகாப்பு இல்லாதபோதும் மறைமுகமான தாக்கம் காரணமாக சுமார் 100 மில்லி மீற்றரிலும் அதிக மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
நேற்று இரவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் மழை பெய்கின்றது.
இலங்கையிலிருந்து வடகிழக்கே 900 கிலோ மீற்றர் தூரத்தில் தற்போது தாழமுக்கம் நிலைகொண்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments