Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் கிழக்கின் இளைஞர் முன்னணியினால் இலவசக் கல்விக் கருத்தரங்கு

கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின் (பிரதிப்பணிப்பாளர், தேசிய மொழிக்கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவகம்) ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒக்ஸ்போட் கல்வி நிறுவனத்தின்
அனுசரணையுடன் (க.பொ.த) சாதாரணதர மாணவர்களிற்கு ரூபா420,000.00 பெறுமதியான புலமைப்பரிசில் வழங்கிவைக்கப்பட்டது. தலா ரூபா7000.00 பெறுமதியான புலமைப்பரிசில் 60மாணவர்களிற்கு முன்னணியின் தலைவரினால் வழங்கிவைக்கப்பட்டது. அண்மையில் குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தில் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற (க.பொ.த)சாதாரண தர மாணவர்களிற்கான இலவசக்கல்விக் கருத்தரங்கின் போதே இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து தலைவர் கோபிநாத் கருத்து தெரிவிக்கையில் மாணவர்கள் தங்களுடைய (க.பொ.த) சாதாரணதர பரீட்சையினை நிறைவு செய்ததும் பரீட்சை பெறுபேறு வெளியிடும் வரையில் இருக்கும் சுமார் நான்கு மாத காலத்தினை பயனுள்ள வகையில் பயன்படுத்தவேண்டும். ஒவ்வொரு மாணவரும் இக்காலப்பகுதியினுள் தங்களுடைய தகமைகளினை உயர்த்தும் வகையில் நேரத்தினை செலவளிக்கவேண்டும். நேரம் பொன்னானது எனக் கூறுவார்கள் ஆனால் உண்மையிலே பொன்னோடும் ஒப்பிட முடியாத விலைமதிப்புமிக்க செல்வமே நேரமாகும்.

வீணாக்கும் பொழுதுகள் எப்பாடு பட்டாலும் மீண்டும் பெறமுடியாதவை. எனவே மாணவர்களாகிய உங்களிற்கு கிடைக்கும் நான்கு மாத காலப்பகுதியினுள் இவ் புலமைப்பரிசிலை பயன்படுத்தி உங்களுடைய கல்வித் தகமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களிற்கு தேவையான உதவிகளை வழங்க நானும் எமது அமைப்பும் தயாராக உள்ளோம். நாளைய எமது தமிழ்ச் சமூகம் உங்களுடைய கரங்களிலே உள்ளது, அதனால் தான் உங்கள் கரங்களை பலப்படுத்தும் முயற்சியில் நாங்கள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். எனத் தெரிவித்தார்.





Post a Comment

0 Comments