நியுசிலாந்தில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியின் பின்னர் சுனாமி அலைகள் தாக்கியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.நியுசிலாந்து நேரப்படி நள்ளிரவிற்கு சற்றுபின்னதாக அந்த நாட்டை பூகம்பம் தாக்கியதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அதற்கு பின்னர் சுனாமி அலைகள் வரத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
முதலாவது அலை ஆபத்தானதல்ல என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் எனினும் ஆபத்தான அலைகள் தாக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.மக்களை தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேறுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெலிங்டனிலும் சில பகுதிகளிலும் சிறிய அலைகள் வரத்தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments