நியுசிலாந்தை ஞாயிற்றுக்கிமை பாரிய பூகம்பொன்று தாக்கியதை தொடர்ந்து உருவான சுனாமி அலைகளால் பெருமளவு மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளதுடன் பதட்டமும் காணப்படும் அதேவேளை திங்கட்கிழமை மீண்டும் அந்த நாட்டை பூகம்பம் தாக்கியுள்ளது.
இரண்டாவது பூகம்பம் கிறிஸ்ட்சேர்சிலிருந்து வடகிழக்கில் உள்ள தீவுகளை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியை தாக்கிய பாரிய பூகம்பத்தினால் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.ரிச்டர் அளவையில் 7.5 ஆக பதிவுசெய்யப்பட்டிருந்த குறிப்பிட்ட பூகம்பத்தை தொடர்ந்து சுனாமி தாக்கமும் ஏற்பட்டது.இந்த பாரிய பூகம்பத்தை தொடர்ந்து 100ற்கும் மேற்பட்ட சிறியசிறிய அதிர்வுகள் ஏற்பட்டதுடன் மின்சார விநியோகம் குடிநீர் விநியோகம் என்பன துண்டிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.100 வயது பெண்ணொருவரும் அவரது உறவினர் ஓருவரும் கைகுரா என்ற நகரின் இடிபாடுகள் மத்தியிலிருந்து மீட்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.பூகம்பத்தா ல் அவர்களது வீடு முற்றாக தரைமட்டமாகியுள்ளதாகவும்,உயிரு டன் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் கணவர் உயிர் இழந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை மற்றுமொரு பெண்ணும் பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரபலமான நகரமான கைகுராவில் மண்சரிவு காரணமாக வீதிகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன,தொலைத்தொ டர்வசதிகளும்,மின்சாரமும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் மீட்புநடவடிக்கைகளில் இறங்கியுள்ளதுடன் ஹெலிக்கொப்டர்களை பயன்படுத்தி மீட்பு நடவடிக்கைகளிவ் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை இந்த பூகம்பத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதுடன் சில பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன


0 Comments