Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு போதிய பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இது குறித்து பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். மிகவும் தரம் குறைந்த அளவில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட வாகனங்களும் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாகவும் இந்த விடயம் குறித்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments