ஆவா குழுவுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடையே முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும் இருப்பதாக இன்று பாராளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆவா குழு தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடையே ஒருவர் இராணுவத்தில் சேவையாற்றியவர். அவர் தமிழர். தான் இராணுவத்திலிருந்து விலகிய பின்னர் இந்த குழுவுடன் இணைந்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளதாக இராஜங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்
0 Comments