மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை ஆற்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று(12) சனிக்கிழமை இரவு வேளையில் மீட்கப்பட்டுள்ளது.
ஆற்றிற்கு மீன்பிடிக்க சென்றவர்களே இச்சடலத்தினை மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் பழுகாமம் கிராமத்தினைச்சேர்ந்த மணியம் சகிலா(வயது27) என இனங்காணப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன் இவரது கணவர் ஏற்கனவே விபத்தில் சிக்கி இறந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆற்றில் வைத்து முதலைகடித்துள்ளதுடன், மரணத்திற்கான காரணம் வெளிப்படாத நிலையில் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: