சமையலறை பக்கமே போயிராதவர்களே இம்முறை வரவு செலவுத்திட்டத்தை தயாரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியான பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அளுத்கம பகுதியில் விஹாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் சுமையை மக்கள் தற்போது புரிந்துக்கொண்டுள்ளனர். சில பொருட்களுக்கான விலை இரண்டு ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக கூறுவதை கேட்டு கிராமபுற மக்கள் சிரிக்கின்றனர். சமையலறையை காணாதவர்களே இந்த வரவு செலவு திட்டத்தை தயாரித்துள்ளனர். அவர்களே மக்களை நிர்கதி நிலைக்கு தள்ளியுள்ளனர். என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments