கௌதம புத்தர் உயிருடன் இருந்திருந்தால் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியை மரத்தில் கட்டிவைத்து அடித்திருப்பார் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை காணும் வகையில் பாராளுமன்றத்தினை அரசியல் சபையாக மாற்றி புதிய யாப்பினை உருவாக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த வேளையில் வடகிழக்கில் மட்டுமன்றி தெற்கிலும் இந்த யாப்பினை உருவாக்க விரும்பாததீயசக்திகள் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி எதிர்காலத்தில் ஸ்திரத்தன்மையை குழப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
மூன்று இனங்களும் வாழும் இந்த கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் ஒரு சில தீயசக்திகள் காணிகளை அபகரிப்பதிலும் குடியேற்றங்களை செய்வதிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமங்கல தேரர் கச்சக் கொடிசுவாமி மலை கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடு பகுதியில் காணிகளை பிடித்துவிட்டு, அதற்கு ஒப்பம் வழங்கவேண்டும் என போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தார்.
அதேபோல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்புக்கு வந்தபோது அவரது விகாரைக்கு செல்லவில்லை என்பதற்காக அங்கு திறக்கப்படவிருந்த நினைவுப்படிவத்தை உடைத்து எறிந்தார்.
குறித்த பிக்கு பட்டிப்பளை பிரதேச செயலாளராக முன்னர் சிவப்பிரியா வில்வரெட்னம் இருந்தபோது, அவரது அலுவலகத்திற்குள் நுழைந்து பெண் அதிகாரி என்று கூட பார்க்காமல் மிகவும் கேவலமான முறையில் நடந்துகொண்டார்.
அதனைவிட கடந்த வாரம் மட்டக்களப்பில் சிங்களவர்களை குடியேற்றுமாறு அம்பாறை - மஹாஓயா வீதியை மறித்து போராட்டம் நடாத்தியபோது அங்குசென்ற பட்டிப்பளை பிரதேச செயலாளரையும் அப்பகுதி கிராம சேவையாளரையும் மிக கேவலமான முறையில் பேசியுள்ளார்.
இதே பிக்கு கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் மின்சார பட்டியல் செலுத்தாத காரணத்தினால் மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற மின்சாரசபை ஊழியர்கள் பிக்குவால் தாக்கப்பட்டனர்.
0 Comments